Sunday 24 June 2012

குயிலின் நிறம் 


0 மயக்கும் இசையில் 
  மறந்தே போனது 
  குயிலின் நிறம் .


0 அடித்து துவைக்க 
   மனமில்லை .....
   சட்டையில் பூக்கள் .


0 எல்லோருக்கும் உணவு 
  கிடைக்காத வருத்தமா 
  குனிந்தபடி நெற்கதிர் .